எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா?

எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சி ஆரிய சூழ்ச்சி என்று பிறாமணர்களை கரித்து கொண்டே இருப்பதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது என்று பலரும் கூறுவதை நாம் கேட்டிருப்போம். சரி நாம்தான் வீணாக பழி போடுகிறோமா அல்லது முந்தைய தலைமுறையினர் கூறியவற்றை கேட்டு ஆராயாமல் சிறுபான்மையான பிறாமணர்களை விமர்சிக்கின்றோமா என்று சந்தேகம் வர தொடங்கியது. அதுவும் தமிழகத்தில் ஒரு படி மேலே சென்று பிறாமணர்களை கேள்வி கேட்பவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லையா என்ற பேதமில்லாமல் அனைவரையும் பிறாமண துவேசி என்றும் பெரியாரிய … Continue reading எதற்கெடுத்தாலும்  பிறாமண சூழ்ச்சியா? →

மதம் மாறியும் சாதி அரக்கன் தொடருகிறான்

இப்பதிவு மீண்டும் பிறாமண சூழ்ச்சியை பறைசாற்றுகிறதா என்றால் இல்லை என்ற பதிலே ஆனால் சாதியென்னும் அரக்கன் உருவாவதற்கும் இன்றைய நிலையில் வாழ்வதற்கும் தேவையான அடித்தளைத்தை இட்டவர்கள் பிறாமணர்கள்தான் என்ற மட்டில் பதிவின் நோக்கத்தை பார்ப்போம் . இப்பதிவில் மதம் மாறியப் பின்னரும் தனக்கு கீழ் எத்தனை சாதிகள் இருக்கிறது என்று தான் மேலோன் என்று வெறிபிடித்த வாழ்க்கை வாழும் மக்களை பற்றியது. சமீபமாக என் நண்பரின் சகோதரிக்கு  மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தனர். நண்பரின் குடும்பம் பறையர் சாதியிலிருந்து கிறித்துவ … Continue reading மதம் மாறியும் சாதி அரக்கன் தொடருகிறான் →

சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் ஓதக்கூடாது?

சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் சொல்லக்கூடாது? அதற்கு காரணம் சாதிப் பாகுபாடா என்று கேள்வி கேட்டால் உடனடியாக இல்லை அது சமசுகிருத மந்திரங்கள் உச்சரிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பொருள் மாறிவிடும் அதனால் பெரிய இழப்பு ஏற்படும். அதனால்தான் சமசுகிருத மந்திரங்களை அனைவரும் சொல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பார்கள் அதுமட்டுமல்லாமல் தமிழ் மொழியில் வடமொழியில் உள்ளது போன்று ஷ ஜ ஸ ஹ ஸ்ரீ போன்று இல்லை, அது போல் தமிழில் க, ச … Continue reading சமசுகிருத மந்தரங்களை ஏன் எல்லோரும் ஓதக்கூடாது? →

கிரகணத்தில் கோயில்களை மூடலாமா?

கிரகணம் என்பது என்ன என்று சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கேட்போமேயானால் அதற்கு விஷ்ணு புராணத்தை மேற்கோள்காட்டி ஒரு கற்பனை கதையை கூறிவிடுவர். கிரகணம் பற்றிய கதையை சுருக்கமாக இப்பதிவின் இறுதியில் வழங்கப்பட்டுள்ளது அதே இன்றைய நிலையில் கிரகணம் என்றால் என்ன என்று கேட்டால், பூமியின் நிழல் நிலவின் மீது படர்ந்து விலகினால் அது சந்திர கிரகணமென்றும், நிலவு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து செல்வதை சூரிய கிரகணம் என்றும் தெளிவான அறிவார்ந்த பகுத்தறிவான கருத்தை எடுத்துரைப்பர் … Continue reading கிரகணத்தில் கோயில்களை மூடலாமா? →

தையே தமிழர்களின் புத்தாண்டு

தமிழர்களின் புத்தாண்டு தை மாதமா அல்லது சித்திரை மாதமா, என்ற தலைப்பில் பல விதமான விவாதங்கள் தொடர்ந்தே வருகிறது. முந்தைய பதிவில் தையா சித்திரையா என்ற கேள்விக்கு நமது நாட்டின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் தையே ஆண்டின் முதல்நாள் என்பதனை பார்த்தோம். சங்கராந்தியை ஒரே நாளில் இந்தியா முழுவதும் ஒரே கருத்துடன் கொண்டாடினாலும் புத்தாண்டு என்று வந்தவுடம் பல குழப்பங்களுடம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடும் பழக்கம் ஏன் வந்தது??? அதே போன்று இந்தப் பதிவில் சற்றே வேறுபட்ட … Continue reading தையே தமிழர்களின் புத்தாண்டு →

ஐயப்பன் வழிபாட்டிலுள்ள குழப்பங்கள்

இந்து மத நலிவுக்கு காரணங்கள் - 1 என்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு கார்த்திகை முதல் தை மாத பிறப்புவரை பலர் அதீத பத்தியுணர்வுடன் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரி மலைக்கு செல்லும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே உள்ளது அது ஒரு புறமிருக்க ஐயப்பனின் பிறப்பு பற்றி  உள்ள கற்பனைகளும் ஆபாசங்களும் பரந்து விரிந்து கிண்டலுக்கு உண்டாகி கொண்ட வண்ணமே உள்ளது. 1- ஐயப்பனை சிவனுக்கும் மோகினியாக மாறிய விஷ்ணுக்கும் பிறந்ததாக கூறுகின்றனர். ஆரிய  … Continue reading ஐயப்பன் வழிபாட்டிலுள்ள குழப்பங்கள் →

சிரார்த்த மந்தரம் ஓர் ஆய்வு

சமசுகிருத மந்தரங்களில் உள்ள ஆபாசங்கள் என்ற முந்தைய பதிவில் சிரார்த்த மந்தரங்களில் தாயை பழிப்பதாக உள்ள மந்தரத்தை பற்றி பதிவிட்டிருந்தோம். ஆனால் விவாதத்திற்கு உட்படுத்தியர்கள் பலரும் பல சமாளிப்புடன் ”பலரை அப்பா என்று அழைப்பதால் விந்து கொடுத்த தந்தைக்கு செல்லட்டும்” என்பதாக மந்த்ரம் உள்ளதாக விளக்கினர், சிலர் அந்த பெண்ணை பிறந்தது முதல் பாதுகாத்த தேவர்கள் என்று நியாயப்படுத்தினர். அதற்காகவே இந்த பதிவு சிரார்த்த மந்தரத்தின் ஆபாசங்களை சமசுகிருத மோகம் கொண்டவர்களுக்காக வெளிகொணரும் எண்ணத்தில் வெளியிடப்படுகிறது. ”யன்மே … Continue reading சிரார்த்த மந்தரம் ஓர் ஆய்வு →

வர்ண தர்மம் ஓர் ஆய்வு

  வர்ண தர்மம் பிரம்மாவின் முகம், புஜங்கள் , தொடைகள், பாதங்கள் இவற்றினின்றும் உண்டானவர்கட்கு அந்தந்த உருப்புகளின் கார்யங்களாகிய வேத அத்யயனம், சத்துருக்களை வெல்லுதல், தேச ஸஞ்சாரம் செய்தல், உழைப்பெடுத்தல் என்ற கார்யங்கள் முறையே விதிக்கப்பட்டுள்ளன. அவரவர் தர்மங்களைச் செய்கின்றவர்கட்கு நற்கதியும் , செய்யாதவர்கட்கு துர்கதியும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது வேதத்தையும் பிரம்ம ஜ்ஞானத்தையும் உபதேசிக்கத் தகுதியுற்றவன் பிராம்மணன் ஆவன். ஆபத்திலிருந்து காப்பவன் ஷத்ரியன் ஆவான். வியாபார நிமித்தம் தேச ஸஞ்சாரம் செய்கிறவன் வைசியன் ஆவான். முற்கூறிய மூன்று … Continue reading வர்ண தர்மம் ஓர் ஆய்வு →

இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

இந்து மதத்தில் சலைக்காமல் குழப்பங்களையும் கற்பனைகளையும் ஆபாசங்களையும் எண்ணிக்கைக்கு அடங்கா வகையில் புகுத்திக்கொண்டே உள்ள குள்ள நரிக் கூட்டம் சமீபமாக செய்த குழப்பமே புஷ்கரம் என்ற ஒரு குழப்பம், சைவ மடாலயங்கள் புஷ்கரம் பற்றிய எந்த வரலாற்று சான்றுகள் இல்லை என்று வெளிப்படையாக கூறியும் சைவ மடாதிபதிகளை எள்ளளவும் மதிக்காமல் அரசன் முதல் ஆண்டிவரை அக்குழப்பத்திற்கு ஆளாகினர். இது போன்ற பல குழப்பங்களால் நாத்திகர்களை விட இந்த பிறமண்ணினர்களால்தான் இந்து மதத்திற்கு நலிவும் மெலிவும் வீழ்ச்சியும் தாழ்ச்சியும் … Continue reading இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1 →

ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம்

  இந்து மதக் கடவுளர்களை பற்றிய காஞ்சிபுரத்து ஜெயேந்திரனின் கருத்துக்கு கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கும் விதமாக இந்தப்பதிவு கற்பணையாக சரித்திரம் புணையப்பட்ட காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி.  சிறையில் இருந்த போது எடுக்கப்பட்ட ஒலி ஒளி காட்சிகளில் சில பத்தாண்டுகளுக்கு பிறகு வெளியானது . அந்த காட்சியில் இந்து மதக் கடவுளர்கள் கொலைக்காரர்கள் என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.  அவரின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் மெய்யான இந்துக்கள் சார்பாக வெளியிடப்படுகிறது. காஞ்சி மடத்து ஜெயேந்திர … Continue reading ஜெயேந்திர சரஸ்வதிக்கு கண்டனம் →