வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

வர்ணாசிரம தர்மம்

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம்

பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம்.

இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த சமசுகிருத வேத புரட்டுக்களால் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? அதனால் நமது தமிழினத்திற்கு ஏற்பட்ட அடிமைத்தனத்தின் விளைவு? வர்ணாசிரம தர்மத்தை பற்றி மேலும் எவரும் பேசினால் அவர்களுக்கு நாம் கேட்கும் கேள்விகாகவும் அல்லது அர்த்தமே தெரியாமல் கூறுபவர்களுக்கு பதில் கூறும் வன்னமாகவும் இருத்தல் வேண்டும்.

பகுத்தறிவு பகலவன் , வெந்தாடி வேந்தன் , சிறைக்கஞ்சா சிங்கம் தந்தைப் பெரியார், பிறாமண எதிர்ப்பு என்ற போராட்டத்தை துவக்கிய காரணம் இந்த புருச சூக்தத்தின் அடிப்படையில் தோன்றிய வர்ணாசிரம தர்மம் தான். இந்த மந்திரங்களை மேற்கோல் காட்டியே இராசாசி அவர்கள் ”காலங்காலமாக தமிழர்களை சூத்திரன் என்று அழைத்திருக்கிறார்கள் என்று பெரியாரிடம் கூறினார்” ஏனென்றால் இது வேதத்தில் இருக்கிறது என்று காட்டிட்ட சான்று தான் இந்த புருச சூக்தம்.

இதன் பிறகே ஐயா பெரியார் அவர்கள்

1- தமிழகத்து கோயில்களில் தமிழில் அல்லாமல் சமசுகிருதத்தில் மந்திரங்கள் ஏன்?

2- அனைவரும் கருவறைக்கு சென்று பூசை செய்ய வேண்டும்.

3- அனைவரும் பூசாறி ஆக வேண்டும், போன்ற போராட்டங்களை நடத்தினார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் தந்தைப் பெரியார் அவர்கள் நாத்திகர் அல்ல! மெய்யான இந்து மதமாகிய தமிழர்களின் இந்து மதம் தழைக்க பிறாமணர்களின் தோலை உரித்து காட்டினார்.

புருச சூக்தம் ஆய்வு
ரிக் வேதம் – அத்தியாயம் 10-090 – http://www.sanskritweb.net/rigveda/griffith.pdf

ஆயிரம் தலைகள் , ஆயிரம் கண்கள், ஆயிரம் கால்களை கொண்டவன் புருசா என்பவன். இவனின் நான்கில் ஒரு பங்கு தான் இந்த உலகமும் அதன் உயிரினமும் பயிரினமும் ஆகும் , மீதமுள்ள அளவு தான் பிரபஞ்சம் எனப்படுகிறது. இப்படிபட்ட புருசா என்பவனிடமிருந்து தான் பிரம்மா வந்தார். வந்த பிரம்மா மிக விரைவில் வளர்ந்து பின் பூமியை உருவாக்கினார். பிரம்மா, தேவர்களும் , முனிவர்களும் சூழ ஒரு வேள்வியை செய்தார்  அந்த வேள்வியில் புருசா என்று மேலே குறிப்பிட்டவரை பலியிட்டனர்……

ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தின் விளக்கம் – பாகம் 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது

மனிதனை மனிதனாக பார்க்கமுடியாத அளவிற்கு சாதி சண்டைகள் வலு பெறுவதற்கான காரணம் இந்த புருஷ சூக்தத்தின் நாலு வரிகளே. இந்த நாலு வரிகளே வர்ணாசிரம தர்மத்திற்கு ஆதாரமாக உள்ளது

மேலும் படிக்க http://wp.me/p396IQ-6n

ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தின் விளக்கம் – பாகம் 3

வர்ணாசிரம தர்மத்தை பிழைக்கவைக்க இந்து மத கோயில்களிலேயே புருஷ சூக்தம் ஓதப்படுகிறது…

புருஷ சூக்தத்தின் பொருள் புரிந்தவருக்கு காரணம் புரியும் பொருள் புரியாதவன் கிணற்று தவளை போன்று பாடிக்கொண்டிருப்பான்

மேலும் படிக்க http://wp.me/p396IQ-6y

One thought on “வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

  1. வர்ணம் என்பது பிறப்பால் வருவதாக எங்கே உள்ளது ?

    ஒருவனது குணம்,செயலை வைத்துதான் இந்த வர்ணம் வருகிறது என கீதை 4.13 சொல்கிறது. அப்புறம் எப்படி ?

    சார் . வர்ணம் என்பது ஜாதி என எவன் கூறினான் ?

    இது சமுதாய நிலை தான்.

    உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இந்த நால்வகை பிரிவினர்களும் உள்ளனர் என்பதை ஆராய்வோம். நிறுவனத்தின் கொள்கைகளையும் படைப்புகளையும் வடிவமைக்கக்கூடிய புத்திசாலிகள் ஒரு பிரிவினர், இவர்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பர், இவர்களை பிராமணர்களுடன் ஒப்பிடலாம்.

    நிறுவனத்தினை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர், இவர்களை சத்திரியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை வெளியில் சென்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்பவர்கள் மூன்றாம் வகையினர், இவர்களை வைசியர்களுடன் ஒப்பிடலாம்.

    நிறுவனத்தின் படைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நான்காம் வகையினராகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும் உள்ளனர், இவர்களை சூத்திரர்களுடன் ஒப்பிடலாம்.

    இப்போது சொல்லுங்கள் இந்த நால்வகை பிரிவினர்கள் இல்லாமல் உலகம் இயங்குதல் சாத்தியமா என்று.

    பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே

    Like

Leave a comment